துபாயில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு! - துபாயில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
🎬 Watch Now: Feature Video
ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டிற்குமான வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நான்கு நாள் பயணமாக இன்று மாலை சென்னையிலிருந்து புறப்பட்டு துபாய் சென்றார். துபாய் சென்றடைந்த முதலமைச்சர் ஸ்டாலினை அந்நாட்டிற்கான இந்தியத் தூதர் அமன் பூரி வரவேற்றார். துபாய் தொழிலதிபர்கள் மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் பூங்கொத்து கொடுத்து முதலமைச்சரை வரவேற்றனர். முதலமைச்சர் ஸ்டாலினுடன் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் சென்றுள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST