ஆம்புலன்ஸில் வந்து பெண் வாக்காளர் வாக்களிப்பு - ஆம்புலன்ஸில் வந்து பெண் வாக்காளர் வாக்களிப்பு
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாநகராட்சியில் 48 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று (பிப்ரவரி 19) காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் 31ஆவது வார்டுக்குள்பட்ட திருமலைசாமிபுரத்தில் வசித்துவருபவர் அம்சா. இவர் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனது வீட்டிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் வாக்குச்சாவடிக்கு வருகைதந்தார். பின்னர் அவரால் நடந்துசெல்ல இயலாது என்பதால் ஸ்டெக்சர் மூலம் வாக்குச்சாவடிக்கு கொண்டுவரப்பட்டார். பின்னர் அவர் தெரிவித்த சின்னத்திற்குத் தேர்தல் அலுவலர் வாக்களித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST