வீடியோ: திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம் - லட்சார்ச்சனை பூஜை
🎬 Watch Now: Feature Video
முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா இன்று(அக்.26) காலை தொடங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டுச் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி தந்தார். சண்முகருக்கு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற்றது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் தொடர்ந்து விழா நடைபெற உள்ள 6 நாட்கள் லட்சார்ச்சனை பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:30 PM IST