அம்பாசமுத்திரத்தில் திரியும் ஒற்றை யானை- வீடியோ வைரல் - பொட்டல் கிராமத்தில் ஒற்றை யானை உலா
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே மலை அடிவாரத்திலுள்ள மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் பொட்டல் என்ற கிராமத்தின் அருகே கடந்த சில நாட்களாக ஒற்றை யானை அவ்வப்போது கீழே இறங்கியுள்ளது. இதனை அப்பகுதியிலுள்ள மக்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். யானை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து யானை கீழே இறங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் தற்போது யானை சுற்றித்திரியும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST