Video: சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் - Suruli Falls is one of Theni tourist attractions
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று, சுருளி அருவி ஆகும். இந்த சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கும், இல்லங்கள் மற்றும் கோயிலுக்குத் தேவையான புனித நீர் எடுத்துச்செல்வதற்கும் இங்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் சுருளி அருவிக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் சுருளி அருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கி உள்ளனர். மேலும் ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கி விட்டதால் சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் சுருளி அருவிக்கு வருகை தந்து புனித நீராடிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Last Updated : Feb 3, 2023, 8:34 PM IST