LGM படத்தின் ட்ரெய்லர் லான்ச்! சென்னை வந்த தோனிக்கு உற்சாக வரவேற்பு! - dhoni production
🎬 Watch Now: Feature Video
சென்னை: தோனி மற்றும் சாக்சி தோனி இணைந்து தயாரிக்கும் தமிழ் படமான லெட் கெட்ஸ் மேரீட் (lets get married) படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நிகழ்ச்சி இன்று (ஜூலை 10) சென்னையில் நடைபெறவுள்ளது.
தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள லெட் கெட்ஸ் மேரீட் (LGM) என்ற படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியானது இன்று லீலா பேலசில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக ராஞ்சியில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான எம்.எஸ்.தோனியும் அவரது மனைவி சாக்சியும் விமான மூலம் நேற்று (ஜூலை 9) சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். ரசிகர்கள் அனைவரும் தோனி அவர்களுக்கு மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் விமான நிலையத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் கோப்பை மாதிரியை தோனிக்கு கொடுத்து வரவேற்றனர்.
ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முன்னதாக ‘எல்ஜிஎம்’ படத்தின் டீஸர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. காதல் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது