video:ரூ.1-க்கு பிரியாணி வழங்கிய அஜித் ரசிகர் - Biryani for one rupee at Chinnamanur
🎬 Watch Now: Feature Video
தேனி: அருகே சின்னமனூரில் உள்ள வீரம் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் காளிதாஸ். இவர் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இன்று நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்பட வெளியீட்டு விழாவை கொண்டாடும் விதமாக தனது உணவகத்தில் அஜித்தின் 61ஆவது திரைப்படம் என்பதை முன்னிட்டு கடைக்கு வரும் 61 வாடிக்கையாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கியும், திரைப்படத்தைப் பார்த்து வரும் ரசிகர்கள் கொண்டு வரும் டிக்கெட்டிற்கு தனது உணவகத்தில் 50 சதவீதம் சலுகை அளித்தும் உள்ளார். மேலும் இன்று முதல் தினமும் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு விலை இல்லா உணவு வழங்கும் திட்டத்தையும் வீரம் ரெஸ்டாரன்ட் காளிதாஸ் தொடங்கியுள்ளார்.
Last Updated : Feb 3, 2023, 8:38 PM IST