Video: உடல்நலம் தேறி ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் ரோபோ சங்கர்!! - ரோபோ சங்கரை நலம் விசாரித்த கமல்ஹாசன்
🎬 Watch Now: Feature Video
Published : Sep 12, 2023, 3:36 PM IST
சென்னை: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் தனியார் தொலைக்காட்சி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
கடந்த ஆண்டு ரோபோ சங்கர் உடல் மெலிந்த நிலையில் இருக்கும் புகைப்படம் சமூக வலைதலங்களில் வெளியாகி பேசு பொருளாக மாறியது. ரோபோ சங்கர் மதுவுக்கு அடிமையானதால் இவ்வாறு உடல் மெலிந்து காணப்படுகிறார் என சமூக வலைதலங்களில் பல பேர் கருத்து கூறி வந்தனர்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் மனைவி சில மாதங்களுக்கு முன்பு பல்வேறு ஊடகங்களில் ரோபோ சங்கரின் உடல்நிலை குறித்து மனம் திறந்தார். அதில் ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் உடல் மிகவும் மெலிந்த நிலையில் காணப்பட்டதாகவும், தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் கூறினார்.
மேலும் ரோபோ சங்கர் உடல்நிலை குறித்து நடிகர் கமல்ஹாசன் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விசாரித்தார். தற்போது ரோபோ சங்கர் உடல் நிலை தேறி ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: வெற்றிமாறன் கதையில் மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் சூரி!