வரிசை கட்டி நின்ற வண்டிகள்.. பரபரத்த கர்நாடக பார்டர்: மரம்விழுந்ததால் முக்கியசாலையில் பிளாக்! - With the help of the public the forest department cleared the bamboo trees to accommodate the vehicles

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Aug 10, 2022, 8:21 PM IST

Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ஈரோடு: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அருகே ஆசனூர் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்தது. இதற்கிடையே இன்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்ததில் காரப்பள்ளம் மைசூர் நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த மூங்கில் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் தமிழ்நாடு, கர்நாடக இடையே போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. தாளவாடியில் இருந்து வந்த பள்ளி மாணவர்கள், அரசுப்பணியாளர்கள் வீடு திரும்ப முடியாமல் 2 மணி நேரம் காத்திருந்தனர். அங்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் வாகனம் செல்வதற்கேற்ப மூங்கில் மரங்களை அகற்றினர். சுமார் 2 மணி நேரத்துக்குப் பின் மீண்டும் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:26 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.