Video: தாளவாடி அருகே தொடரும் யானைகள் அட்டகாசம்: விடிய விடிய போராடும் விவசாயிகள் - பயிர்களை சேதப்படுத்தும் யானைகள்
🎬 Watch Now: Feature Video
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி பகுதிக்குள் புகுந்த காட்டுயானை ஒன்று, விளைநிலத்தில் பயிரிட்டுள்ள கரும்பு தோட்டத்துக்குள் நுழைந்து கரும்பு பயிர்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்து விவசாயிகள் ஒன்றிணைந்து கரும்பு தோட்டத்தில் முகாமிட்ட காட்டுயானையை சத்தம் போட்டு வெகுநேரம் போராடி விரட்ட முயற்சித்தும் காட்டுயானை நகர முடியாமல் கரும்புத் தோட்டத்திலே முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தியது. பின்னர் இதனை டிராக்டர் மூலமாக துரத்தினர். தினமும் இரவு நேரங்களில் யானைகளை துரத்துவதே தொடர் கதையாக உள்ளதாக விவசாயிகள் வேதனைத் தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST