சிவகாசி மாநகராட்சியின் 4 மண்டலக்குழுத் தலைவர் பதவியை திமுகவே கைப்பற்றியது! - சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: முதன்முறையாக சிவகாசி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சியின் மேயராக சங்கீதா இன்பம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், இன்று (மார்ச் 31) தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கான மண்டலக்குழு தலைவர்களுக்கான தேர்தலில், 48 வார்டுகளைக் கொண்ட சிவகாசி மாநகராட்சிக்கு 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு மண்டல குழுத் தலைவர்களுக்கான மறைமுகத்தேர்தல் சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், முதல் மண்டலக் குழுத் தலைவராக குருசாமியும், இரண்டாவது மண்டலக் குழு தலைவர் ஆக அழகுமயிலும், மூன்றாவது மண்டலக் குழுத் தலைவராக சேவுகனும், நான்காவது மண்டலக் குழுத் தலைவராக சூர்யாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற 4 பேருக்கும் மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் வாழ்த்து தெரிவித்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST