தென்காசியில் சித்த மருத்துவக் கல்லூரி - நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த திமுக எம்பி - தென்காசியில் சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மையத்தை அமைப்பதற்கு, புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு மத்திய அரசு ஏதேனும் திட்டத்தில் உள்ளதா
🎬 Watch Now: Feature Video
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. இதில் தென்காசி மக்களவை தொகுதி திமுக எம்.பி. தனுஷ் எம்.குமார் பங்கேற்று பேசினார். அப்போது " அகத்தியர் வாழ்ந்த பொதிகை மலையை உள்ளடக்கிய தென்காசியில் சித்த மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சி மையம் அமைக்கவும், புதிதாக சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கவும் ஏதேனும் திட்டம் உள்ளதா என கேள்வி எழுப்பினார். தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை இந்தியா முழுவதும் பொதுமக்களிடத்தில் கொண்டு சேர்க்க மத்திய அரசு எடுத்து வரும் முயற்சி குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
Last Updated : Feb 3, 2023, 8:11 PM IST