சினிமாவை மிஞ்சிய ஓசூர் கொள்ளையின் சிசிடிவி காட்சிகள்! - 25கிலோ தங்க நகை கொள்ளை
🎬 Watch Now: Feature Video
ஓசூரில் நேற்று பட்டப்பகலில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை கட்டிப்போட்டு தாக்கி, துப்பாக்கிமுனையில் 9 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்க நகைகள், மற்றும் 96,000 ரூபாய் பணத்தை முகமூடி அணிந்த சிலர் கொள்ளையடித்துச் சென்றனர். 10 தனிப்படைகள் அமைக்கப்பட்ட இவ்விவகாரத்தில், கொள்ளை நடந்து 18 மணி நேரத்திலேயே வடமாநில கொள்ளையர்களை சுற்றி வளைத்து காவல்துறையினர் ஹைதராபாத்தில் கைது செய்ததோடு நகைகளையும் மீட்டனர். சினிமா பாணியில் நடந்த கொள்ளையின் அத்தனை நிகழ்வுகளும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தன. அவற்றின் திக் திக் நிமிட தொகுப்பு இதோ.