கனமழை - நிரம்பிய கொடைக்கானல் நட்சத்திர ஏரி - பள்ளங்கி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நாயுடுபுரம், அப்சர்வேட்டரி, செல்லபுரம், செண்பகனூர், பள்ளங்கி, அட்டுவம்பட்டி, பூம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் வெள்ளி நீர் வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது