'கரோனா காலத்திலும் பணி நியமனத்தில் ஊழலா?'
🎬 Watch Now: Feature Video
சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவீந்தரநாத் கூறியதாவது, "கரோனா பரவல் அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் வெளிகொணர்தல் முறையில், ஜென்டில்மேன் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. மூன்று மாதத்திற்கு மட்டுமே ஆன, இந்த தற்காலிக நியமனத்திற்கு, ஒரு மாத ஊதியத்தை தரகுத் தொகையாக, இந்நிறுவனம் கோரி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும். ஊழியர்களை நேரடியாக நியமிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.