பைக் மீது கார் மோதி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம் - பைக் மீது கார் மோதி விபத்து
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14995730-thumbnail-3x2-a.jpg)
கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த ஊஞ்சவேலம்பட்டியைச் சேர்ந்தவர்கள் தம்பதி ராஜூ, சாந்தி. இவர்களது மகள் காளீஸ்வரி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ராஜூ தனது மனைவி சாந்தி, மகள் காளீஸ்வரி உடன் கஞ்சம்பட்டியில் உள்ள மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே, உடுமலை ரோட்டை கடக்க முற்படும்போது, பழனி சிவகிரி பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான கார்த்திக்காமாட்சி என்பவர் காரை அதிவேகமாக ஓட்டி வந்து இருசக்கர வாகனம் மீது மோதினார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST