திண்டுக்கல் பாறைப்பட்டியில் சாலை மறியல்! - பொதுமக்களை கைது செய்த காவல்துறை
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட குடை பாறைப்பட்டி அருகே உள்ள அந்தோணியார் கோயில் முதல் தெரு பகுதியில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சாக்கடை வடிகால் வாய்க்கால் சரியாக தூர்வாரப்படாததால், பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வீடுகளில் புகுந்து விடுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.