ஒளியால் கரோனாவை விரட்டிய கோவை மக்கள்! - கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video

கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, 9 மணிக்கு ஒன்பது நிமிடங்கள் அகல் விளக்குகளை ஏற்றக் கோரினார். அவரது கோரிக்கையை ஏற்ற கோயம்புத்தூர் மாவட்ட மக்கள் அகல் விளக்குகளால் ஒற்றுமையை பறைசாற்றினர். அகல் விளக்கேற்றி கோயம்புத்தூரை ஒளியால் மிளிரச் செய்தனர்.