மதுபானம் வாங்க குவிந்த கூட்டம்: கேண்டீனுக்கு சீல் - crowd to buy liquor at army canteen
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-12247907-902-12247907-1624530788149.jpg)
கடலூர்: முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் புதுப்பாளையத்தில் இயங்கி வருகிறது. இங்கு குறைந்த விலையில் மளிகை பொருட்கள் உட்பட உயர் ரக மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகிறது. தளர்வுகளுக்குப் பின் இன்று கேண்டீன் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் அங்கு திரண்டனர்.
தகுந்த இடைவெளியை பின்பற்றாததால் வட்டாட்சியர் தலைமையில் புதுநகர் உதவி ஆய்வாளர் கேண்டீனுக்குச் சீல் வைத்தார். இரண்டு மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு கேண்டீன் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்றது.