திகில் வீடியோ: படிக்கட்டுகளில் தானாக ஏறிச்சென்ற சக்கர நாற்காலி! - சண்டிகர் மாநிலத்தில் ஆள் இல்லாத சக்கர நற்காலி நகறும் திகில் வீடியோ
🎬 Watch Now: Feature Video
சண்டிகர் மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பு, ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் இரண்டு இருக்கைகளுக்கு நடுவே நிறுத்தப்பட்டிருந்த சக்கர நாற்காலி ஒன்று திடீரென முன்னோக்கி நகர்ந்தது. பார்ப்பதற்கு யாரோ தள்ளிக் கொண்டு செல்வது போல முன்னே சென்ற அந்த சக்கர நாற்காலி ஒரு கட்டத்தில் சிறிய படிக்கட்டுகள் போன்ற அமைப்பில் ஏறி சிறிது தூரம் சென்று நின்றது. மருத்துவமனை தரை வழுவழுப்பாக இருந்ததாகக் கருதப்பட்டாலும், சிறிய படிக்கட்டுகள் வழியே நாற்காலி ஏறி நகர்ந்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதனை இரவு பணியில் இருந்த காவலாளி அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த திகில் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.