நாடாளுமன்ற புதிய கட்டடத்தின் மாதிரி காணொலி - புதிய நாடாளுமன்ற கட்டடம்
🎬 Watch Now: Feature Video
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை முதல் இந்தியா கேட் வரையிலான மூன்று கிலோமீட்டர் தொலைவில் மத்திய அரசு, ’சென்ட்ரல் விஸ்டா’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் கட்டப்படவுள்ளது நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் தொடர்பான மாதிரி காணொலி வெளியாகியுள்ளது.
முக்கோண வடிவில் அமையவுள்ள இந்த நாடாளுமன்றக் கட்டடத்தில் சுமார் ஆயிரத்து 200 பேர் வரை அமரலாம். நாடாளுமன்ற புதிய கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(டிச. 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார். கட்டுமான பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. அதில் போதிய இடவசதியும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.