காசு கேட்ட காவலரை கார் பேனட்டில் தூக்கிச்சென்ற பரபரப்பு சம்பவம்! - VIRAL VIDEO
🎬 Watch Now: Feature Video
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள முந்த்வா பகுதியில், சோதனையில் ஈடுபட்டுவந்த காவலர்கள், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக கார் ஓட்டுநருக்கு 400 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அதற்காக கார் ஒட்டுநர் ஸ்ரீதர் கந்தவர், காரை வேகமாகச் செலுத்தி 700 முதல் 800 மீட்டர்வரை காவலர் சேஷ்ராவ் ஜெய்பாயை (43) காரின் முன்பகுதியில் தூக்கிச்சென்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர் கொடுத்த புகாரின்பேரில் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டு, அவர் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.