இந்தியாவின் கான குயிலுக்கு மணல் சிற்பத்தில் பிறந்தநாள் வாழ்த்து! - பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்
🎬 Watch Now: Feature Video
இந்தியாவின் புகழ்பெற்ற பின்னணி பாடகியான லதா மங்கேஷ்கர் இன்று 90வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பின்னணி பாடகியான இவர், 30 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படிப் பல விருதுகளை, அங்கீகாரங்களைத் தனதாக்கியவர் லதா மங்கேஷ்கர்.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபல மணல்சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்து அதன் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.