காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு - குடிநீர், மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி - காஷ்மீரில் தொடரும் பனிப்பொழிவு
🎬 Watch Now: Feature Video
காஷ்மீரில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக தொடரும் பனிப்பொழிவால் அங்கிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக முஹல் சாலை உள்ளிட்ட பெரும்பாலான இணைப்பு சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இன்று மாலைவரை பனிப்பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடும் பனிப்பொழிவு காரணமாக குடிநீர், மின்சாரம் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்துவருகின்றனர். சாலைகளை சரிசெய்யும் பணிகளை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது.