சென்னை-புதுச்சேரி இடையே பாய்மர படகுப்போட்டி! - பாய்மரப்படகு போட்டி
🎬 Watch Now: Feature Video
சென்னை செயிலிங் யாக் கிளப் மற்றும் புதுச்சேரி செயிலிங் கிளப் இணைந்து முதல்முறையாக, சென்னை-புதுச்சேரி இடையே தேசிய பாய்மரப் படகுப்போட்டியை நடத்தியது. இப்போட்டியில், புதுச்சேரியிலிருந்து ஒரு படகு அணியும், இந்திய ராணுவத்தின் இரு அணிகள், சென்னை கிளப் அணி என 4 அணிகள் பங்கேற்றன. அதிவேகமாக செல்லும் ஜெ.80 என்ற ஃபிரெஞ்சு படகுகளை இப்போட்டியில் பயன்படுத்தினர்.
இப்படகு குழுவினர் மார்ச் 11 ஆம் தேதி சென்னையில் தொடங்கி கடல் மார்க்கமாக மார்ச் 12 ஆம் தேதி புதுச்சேரிக்கு வந்தனர். புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகப் பகுதியிலிருந்து மீண்டும் இன்று சென்னைக்குப் புறப்பட்டனர். இதனை புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் தொடங்கி வைத்தார். புதுச்சேரி குழுவிலிருந்து, புதுவை செயிலிங் கிளப் தலைவர் பிளியோ, வர்சிகா, கிறிஸ்டோபர், லூயி ஆகியோர் பங்கேற்றனர். இக்குழு நாளை சென்னை சென்றடையும். அங்கு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்படுகிறது.