புதுச்சேரி மலர் கண்காட்சி:சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்! - வேளாண் திருவிழா
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரியில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வேளாண் திருவிழா என்ற பெயரில் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான மலர் கண்காட்சி நேற்று (பிப்.07) தொடங்கியது. கரோனா பெருந்தொற்று காரணமாக வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் மலர் உற்பத்தி, காய்கறி சாகுபடி தொழில் நுட்பங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டு ஒரு சிறிய நிகழ்வாக நடத்தப்பட்டது. மலர் கண்காட்சியில் உள்ளூர், வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பங்கேற்று செல்ஃபி எடுத்து மகிழ்தனர்.