கடல் ஆமை பாதுகாப்பாக முட்டையிடும் அபூர்வ காட்சி! - ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள்
🎬 Watch Now: Feature Video
புதுச்சேரி கடற்கரை பகுதியில் தற்போது "ஆலிவ் ரிட்லி" இன ஆமைகள் முட்டையிடத் தொடங்கியுள்ளன. உலகளவில் இவ்வகை ஆமைகள் அழிந்து வரும் சூழலில், இதனை பாதுகாக்க உலகின் பல்வேறு நாடுகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது இவ்வகை ஆமைகள் முட்டையிடும் காலம் என்பதால், புதுச்சேரி வனத்துறை அலுவலர் வஞ்சுளவல்லி தலைமையிலான ஊழியர்கள் கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இனத்தைச் சேர்ந்த ஆமைகள் பொழுது விடிவதற்கு முன்பே ரகசியமாக முட்டையிட்டுச் செல்லும் தன்மையைக் கொண்டவை. அதனால் ஆலிவ் ரிட்லி ஆமைகள் முட்டையிடுவதை புகைப்படமோ அல்லது காணொலிப்பதிவோ செய்வது மிகவும் கடினம். இச்சூழலில் இந்த ஆமைகள் முட்டையிடும் அரிய காட்சி படமாக்கப்பட்டுள்ளது.