'மாஸ்க் அணிய மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபடும் மருத்துவர்' - வைரலாகும் காணொலி - The mask must be worn
🎬 Watch Now: Feature Video
கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு பொருட்கள் வாங்குவதற்காக மருத்துவரான சீனிவாஸ் கக்கலியா என்பவர், முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனைக் கண்ட சூப்பர் மார்க்கெட்டின் ஊழியர் அவரை முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளார். முகக்கவசம் அணியாமல் வந்ததுடன், அணிய மறுத்து சூப்பர் மார்க்கெட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, "முகக்கவசம் அணிய வேண்டும் என்ற நடைமுறை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட ஒரு முட்டாள்தனமான யோசனை, நாம் அரசாங்க உத்தரவைப் பின்பற்றும் முட்டாள்கள்" என்றும் கூறினார். முகக் கவசம் கரோனா தொற்றிலிருந்து காப்பதற்கு ஒருபோதும் உதவாது என்றும் கூறினார். இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது