மூச்சு முட்டும் தலைநகர் - உச்சத்தில் காற்றுமாசு! - காற்று மாசில் அவதிப்படும் டெல்லி
🎬 Watch Now: Feature Video
என்.சி.ஆர் எனப்படும் தேசிய தலைநகர் பகுதியில் சமீப ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசு மிக மோசமாக நிலைக்குச் சென்றுள்ளது. தலைநகர் பகுதியில் காற்று தர அளவீடு 494 என்ற மோசமான நிலையை எட்டியுள்ளது. இந்த காற்று தர அளவீடு 50க்கும் குறைவாக இருந்தால் மட்டுமே, காற்றின் தரம் சிறப்பாக உள்ளதற்கு அடையாளம். 494 என்றால் காற்று மாசின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை படிக்காத பாமரனும் புரிந்துகொள்வான்.