நதியில் பயணம்: படகில் கால்நடைகளைக் கட்டி இழுத்துச் செல்லும் அவலம் - நதியில் கால்நடைகள்
🎬 Watch Now: Feature Video
ஹைதராபாத்: நாகர்கர்னூல் மாவட்டம் கொல்லப்பூரிலிருந்து (தெலங்கானா) கர்னூல் மாவட்ட சந்தைக்கு (ஆந்திரா) சாலை மார்க்கமாகச் சென்றால் 200 கி.மீ., பயணிக்க வேண்டும். செலவும் அதிகம் என்பதால் கொல்லப்பூர்வாசிகள் நதி வழியாக படகில் பயணிக்கின்றனர். இந்தப் பயணத்தின்போது சந்தையில் விற்பனை செய்யவுள்ள கால்நடைகளை ஆபத்தான முறையில் நதியில் இழுத்துச் செல்கின்றனர். படகின் வேகத்திற்கு இணையாக கால்நடைகள் தங்கள் நடையை வேகப்படுத்துவது காண்போர் நெஞ்சை கனக்கச் செய்கிறது.