ரவீந்திரநாத் தாகூர் நாற்காலியில் நான் அமர்ந்தேனா? அமித் ஷா பதில்! - சாந்திநிகேதன்
🎬 Watch Now: Feature Video
சமீபத்தில் மேற்குவங்கத்திற்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாந்திநிகேதனில் ரவீந்திரநாத் தாகூரின் நாற்காலியில் அமர்ந்ததாக காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தினார். இதற்கு பதிலடி தந்துள்ள அமித் ஷா, பார்வையாளர்களின் நாற்காலியில் தான் அமர்ந்ததாக விளக்கம் அளித்துள்ளார். தாகூரின் நாற்காலியில் அமர்ந்தது ஜவஹர்லால் நேருதான் என்றும் அதற்கு ஆதாரம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.