பரப்புரையின் இறுதிநாளில் பரபரப்பு காட்டிய வேட்பாளர்கள் - பொள்ளாச்சியில் இறுதிக்கட்ட பரப்புரை செய்த அனைத்துக் கட்சியினர்
🎬 Watch Now: Feature Video
நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 15ஆவது வார்டில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியில் உள்ள மதிமுக வேட்பாளர் துரை பாய் (எ) சையத் யூசப், முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 9 மாதங்களாக மக்களுக்கு செய்த நலத் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அதேபோல், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளிலும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயராமன் பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 35ஆவது வார்டில் பேட்டியிடும் மக்கள் நீதி மையம் வேட்பாளர் பாபு பிரசாத்தை ஆதரித்து அவரது தந்தை விஞ்ஞானி அழகர் ராமானுஜம் வாக்குச் சேகரித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST