"நாளை வரலாற்றில் முக்கியமான நாள்" - அயோத்திக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த் பேட்டி.. - தனுஷ்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 21, 2024, 3:32 PM IST
சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை விழா நாளை நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபல நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் என பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு அயோத்தி ராமர் கோயில் நிர்வாகிகள் சில நாட்களுக்கு முன் ராமர் கோயில் திறப்பு அழைப்பிதழை வழங்கினர். இதனையடுத்து இன்று ரஜினிகாந்த் தனது மனைவியுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து அயோத்திக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "அயோத்திக்குச் செல்வதில் மிக்க மகிழ்ச்சி. சுமார் 500 ஆண்டுகளாக நீடித்து வந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ராமர் கோயில் திறக்கப்படும் நாள் வரலாற்றில் முக்கியமான, மறக்க முடியாத நாள்" எனக் கூறியுள்ளார்.
அப்போது அங்குக் கூடியிருந்த ரஜினிகாந்த் ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டனர். மேலும், நடிகர் தனுஷ் தனது மகன்களுடன் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்குச் சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.