அதிமுகவில் இணைந்த திமுக வேட்பாளர் - ஆத்திரத்தில் அலுவலகத்தை சூறையாடிய திமுகவினர் - திமுக வேட்பாளரை கண்டித்து கோஷம்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி 15ஆவது வார்டில் திமுக தலைமை உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் வேட்பாளராக பூசாராணி என்பவரை அறிவித்தது. இந்நிலையில், திமுக வேட்பாளரை எதிர்த்து, உதயேந்திரம் பேரூராட்சியில் 3ஆவது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற மகேஸ்வரி என்பவர் திடீரென தலைவர் பதவி கேட்டு அதிமுகவில் இணைந்தார். இதனால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்தும், வாக்குச் சீட்டுகளை கிழித்தெறிந்தும் அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், உதயேந்திரம் பேரூராட்சியில் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST