மலையாள நடிகைகளிடம் அத்துமீறிய ரசிகர்கள் - பதிலடி கொடுத்த நடிகை - இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16496198-thumbnail-3x2-a111.jpg)
கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள ஹிட் லைக் மாலிற்கு புதிய பட புரமொஷன் நிகழ்ச்சிக்கு சென்ற இரண்டு இளம் நடிகைகளை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்தது. இதனையடுத்து கூட்டத்தில் இருந்து வெளி வர முயன்ற நடிகைகளிடம் கூடியிருந்த ரசிகர்களில் சிலர் அத்து மீறினர். இதனால் ஆந்திரமடைந்த நடிகை அந்த ரசிகரை திருப்பி தாக்கினார். இந்நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சிகளை சேகரித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட நடிகைகள் அவர்களது ட்விட்டரில் இது குறித்து அவர்களது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST