Thaipusam: விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச தேர் திருவிழா! - Thaipusam
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/640-480-17666663-thumbnail-4x3-murukan.jpg)
புதுக்கோட்டை: விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மற்றும் வைகாசி மாதம் என வருடத்திற்கு இரண்டு முறை தேர் திருவிழா நடைபெறுவது இந்த கோயிலின் சிறப்பாகும். இதனையொட்டி கடந்த 27 ஆம் தேதி கொடி கட்டுத் துவங்கிய திருவிழாவானது வெகு விமர்சியாக 11 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
பின்னர், தைப்பூச கொடியேற்றத்திற்குப் பிறகு காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி அடுத்த 10 நாட்களுக்குச் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேர் வடத்தைப் பிடித்து இழுத்து 4 ரதம் வீதிகளில் வலம் வந்து நிலையை அடைகிறது. அதனைத் தொடர்ந்து நாளை இரவு தெற்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 6 ஆம் தேதி விடையாற்றியுடன் விழாவானது நிறைவடைகிறது.