ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் - மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
🎬 Watch Now: Feature Video
சென்னை: மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக நடந்த போராட்டம் குறித்து, சட்டப்பேரவையில் விளக்கம் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "ஆளுநரின் கான்வாய் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய். ஆளுநருக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுப்புகள் அமைத்து போலீசார் கட்டுப்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST