லாரி மோதி நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்.. பதைபதைக்கும் சிசிடிவி! - வைரல் சிசிடிவி வீடியோ
🎬 Watch Now: Feature Video
சந்த்கபீர் நகர்: உத்தரப்பிரதேச மாநிலம் சந்த்கபீர் நகரில் 22 சக்கர டிரெய்லர் லாரி மோதி 12 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. சாலையைக் கடக்க முயற்சித்த சிறுவனை திடீரென டிரெய்லர் லாரி மோதியது. இதில் சிறுவன் கீழே விழுந்த நிலையில், ஏதும் நடக்காதது போல் லாரி சாலையை கடந்தது. லாரி கடந்து சென்றதும், அதிர்ஷ்டவசமாக சிறுவன் உயிர் பிழைத்தான். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:39 PM IST