ஓய்வுபெற்ற நீதிபதியின் பாதுகாவலர் மீது கத்தியால் தாக்குதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி - ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் மீது கத்தியால் தாக்குதல்
🎬 Watch Now: Feature Video
சென்னை:சென்னை அசோக் நகரில் ஓய்வு பெற்ற நீதிபதியின் பாதுகாவலர் சக்திவேல்(52) நீதிபதியுடன் காரில் செல்லும் போது கார் முன்னே இருசக்கர வாகனத்தில் மது போதையில் வந்த மூன்று பேர் தகராறில் ஈடுபட்டதுடன், அவரை கத்தியால் சராமரியாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கே.கே.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.பதறவைக்கும் இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST