ஓட்டுக்கு போலி தங்கநாணயம்: வாக்காளர்கள் அதிர்ச்சி! - ஆம்பூரில் வாக்காளர்களுக்கு போலி தங்க காசு பரிசளிப்பு
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சி 36ஆவது வார்டில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவர் மணிமேகலை துரைப்பாண்டி. இவர் நேற்று முன்தினம் (பிப்ரவரி 18) வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிலர் தங்க நாணயத்தை நகைக்கடைக்கு எடுத்து சென்று சோதனை செய்ததில் அது போலி தங்க காசு எனத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த வாக்காளர்கள் போலி தங்க நாணயத்தை நம்பி வாக்களித்து ஏமாந்துவிட்டோமே என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST