'நான் பாசிஸ்ட்டா... மனது வலிக்கிறது' - மரணமடைந்த ரஷ்ய வீரர் தாயிற்கு எழுதிய குறுஞ்செய்தி - உக்ரைனின் ஐநாவுக்கான நிரந்தர உறுப்பினர் செர்ஜி கிஸ்லிட்ஸியா
🎬 Watch Now: Feature Video
'நான் உக்ரைனில் இருக்கிறேன். இங்கு உண்மையான போர் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு பயமாக இருக்கிறது. இவர்கள் பொதுமக்களுக்குக் குறிவைக்கிறார்கள். உக்ரைனியர்கள் எங்களை பாசிஸ்ட் என்கிறார்கள். என் மனது கனக்கின்றது" என உக்ரைனில் போரிட்டு மரணமடைந்த ரஷ்ய ராணுவ வீரர் தன்னுடைய தாயுடன் செல்போன் குறுஞ்செய்தி மூலம் உரையாடியுள்ளார். குறுஞ்செய்தி குறித்த ஸ்கிரீன்ஷாட்களை உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் ட்விட்டரில் காணொலியாக பதிவிட்டுள்ளது. அந்த காணொலியில், உக்ரைனின் ஐ.நா.வுக்கான நிரந்தர உறுப்பினர் செர்ஜி கிஸ்லிட்ஸியா மறைந்த ரஷ்ய ராணுவ வீரரின் குறுஞ்செய்தியை முழுமையாக வாசித்துள்ளார். உருக்கமான இந்த காணொலி போரின் குரூர முகத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் காண்போர் மனதைக் கலங்கடித்துள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:18 PM IST