ஆரோக்கிய தூக்கத்திற்கான வழிகள்
- உங்கள் குழந்தைகள் ஒவ்வொரு இரவும் 9 மணிக்குள் தூங்கச் செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
- குழந்தைகளுக்கு ஏற்றவாறு தூங்கும், எழும் நேரம் உள்ளிட்டவை கொண்டு அட்டவணை உருவாக்குங்கள்.
- சீரான தூக்க நேரத்தை நிர்ணயிங்கள். குறைந்தது 8 மணி நேரம் தூங்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு முன்னதாகவே, பல் துலக்குதல், உணவு, படுக்கை கதைகள், அரட்டைகளுக்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள்.
- படுக்கையறை தூக்கத்திற்கு உகந்தாக இருக்க வேண்டும். மிதமான குளிர், இருட்டு, அமைதியாக அறையாகயிருக்க வேண்டும்.
- முடிந்தவரை குழந்தைக்களுக்கென தனியறை ஒதுக்குங்கள்.
- படுக்கையறையில், அதிக ஒளித் தரக்கூடிய விளக்குகள் இருக்கக் கூடாது. காலையில் சூரிய ஒளிபடும்படி ஜன்னல்கள் இருப்பது நல்லது.
- குழந்தைகளின் படுக்கையறைக்கு அருகில் உணவுகள், அதிக விளையாட்டுப் பொருள்களை வைப்பதைத் தவிர்க்கவும்.
- மின்னணு சாதனங்கள், தொலைக்காட்சி, கணினிகள், செல்போன்கள் படுக்கையறையில் வைக்கப்படாமலிருக்க வேண்டும். இருக்கும்பட்சத்தில் இரவில் அதன் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்.
- குழந்தைக்களுக்குத் தூங்கும்போது, காபி, தேநீர், ஐஸ் கிரீம், சாக்லேட் உள்ளிட்டவை கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- அன்றாடம் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகள் உணவு உண்ணுவதைக் கவனிக்க வேண்டும்.
பெரியவர்களின் ஆரோக்கிய தூக்கத்திற்கான வழிகள்
- சீரான உடல் எடை (அதிகப்படியான உடல் பருமன் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு காரணமாக அமைகிறது. உடல் பருமனால் நுரையீரலுக்குத் தேவையான காற்று சீராகச் செல்வது தடைபடுகிறது. அதனால் மூச்சுத்திணறல், சுவாசக் கோளாறுகள் ஏற்படும். அவை சீரான தூக்கத்தைக் கெடுக்கும். எனவே உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள முயலுங்கள்)
- உடற்பயிற்சிகள் (வழக்கமான உடற்பயிற்சிகள் அல்லது யோகா இரண்டும் ஆரோக்கியத்திற்கும், நல்ல தூக்கத்திற்கும் மருந்து போன்றது. உடற்பயிற்சிகளால் சுவாச மண்டலத்தை வலுப்படுத்த முடியும்)
- தூக்க நிலைகளை மாற்றுதல் (தூக்க நிலைகளை மாற்றுவது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். பின்புறமாகப் படுத்தல், சுவாசத்தைத் தடுக்கிறது. எனவே முன்புறம் மற்றும் பக்கவாட்டில் உறங்குவது சரியாக இருக்கும்)
- படுக்கையறை குளிர்பதமிக்கதாக இருத்தல் (வறண்ட காற்றோட்டமில்லாத படுக்கையறையைத் தவிர்க்கவும். காற்றோட்டமிக்க படுக்கையறையில் உறங்குங்கள். ரூம் ஸ்ப்ரே பயன்படுத்துவது நல்லது)
- வாழ்க்கை முறை (துரித உணவுகள், குடிப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்டவை தவிர்க்க வேண்டும். குறிப்பாக சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் புகைபிடித்தலை தவிர்த்தல் நல்லது. முடிந்தால் இரவில் தவிர்க்கலாம்)
- மருத்துவ சிகிச்சை (குறிப்பிட்ட சிலருக்கு மேலே உள்ள உதவிக்குறிப்புகள் பயனளிக்காமல் போகலாம். அவர்கள் மனநலம், உறவுகள் உள்ளிட்டவையால் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே அவர்கள் மருத்துவருடன் கலந்தாலோசிப்பது நல்லது).
இதையும் படிங்க: சமையல் முதல் தூக்கம் வரை... வெங்காயத்தின் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்!