ETV Bharat / sukhibhava

IVF Day 2023:உலக செயற்கை கருத்தரிப்பு நாள்: குழந்தையின்மையால் போராடும் தம்பதிகளின் நம்பிக்கை.! - கர்ப்பப்பை

செயற்கை கருத்தரிப்பு (IVF) குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூலை 25ஆம் தேதி உலக செயற்கை கருத்தரிப்பு (IVF) தினம் அனுசரிக்கப்படுகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 25, 2023, 1:20 PM IST

Updated : Jul 25, 2023, 2:32 PM IST

ஹைதராபாத்: உலக அளவில் பல காரணங்களால் மக்கள் மத்தியில் இயற்கை கருத்தரிப்பு குறைந்து வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட தம்பதிகளின் கனவையும், ஆசையையும் செயற்கை கருத்தரிப்பு (IVF- In vitro fertilization ) நிறைவேற்றி வருகிறது. இனப்பெருக்கம் மற்றும் கருத்தரிப்பு மருத்துவ உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வரும் IVF குறித்து மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களும் ஏராளமான கேள்விகளும் உள்ளன. இதனை எடுத்துரைத்து IVF குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உலக செயற்கை கருத்தரிப்பு (IVF) தினம் அனுசரிக்கப்படுகிறது. கூடவே உலக கருவியலாளர் தினமாகவும் இந்த நாள் முக்கியத்துவம் பெறுகிறது.

உலக அளவில் சுமார் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் IVF மூலம் பிறந்துள்ளதாக ஆய்வறிக்கைகள் பல தெரிவிக்கின்றன. மருத்துவ உலகில் ஆண்டுதோறும் முன்னேற்றம் கண்டுவரும் IVF செயற்கை கருத்தரிப்பு முறை, ஏராளமான தம்பதிகளின் குழந்தை பெற்றுக்கொள்ளும் கனவை நனவாக்கியுள்ளது.

உலக கருத்தரித்தல் நாள் கொண்டாடப்படுவதற்கான காரணம்; 1977ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதி, இங்கிலாந்தில் உள்ள லெஸ்லி பிரவுன் என்ற பெண்ணுக்கு, மருத்துவர் பேட்ரிக் ஸ்டெப்டோ மற்றும் ராபர்ட் எட்வர்ட் ஆகியோரின் உதவியுடன் சோதனைக் குழாய் மூலம் செயற்கை கருத்தரித்தல் (IVF) முறை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அந்த பெண்ணுக்கு 1978-ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் செயற்கை கருத்தரித்தல் முறையில், குழந்தை முழு ஆரோக்கியத்துடன் பிறந்தது. இந்த குழந்தைக்கு லூயிஸ் பிரவுன் எனப் பெயரிடப்பட்டது. கருத்தரித்தல் உலகில் மாபெரும் திருப்புமுனையாக அமைந்த அந்த நாளை குறிக்கும் வகையில்தான் ஆண்டுதோறும் ஜூலை 25ஆம் தேதி உலக IVF நாள் அல்லது உலக கருத்தரித்தல் நாள் அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார அமைப்பின் அறிக்கை; உலக சுகாதார அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, உலகளவில் ஒவ்வொரு 6 பேரில் ஒருவர் குழந்தையின்மை பிரச்சனையை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயதுவந்த மக்கள் தொகையில் சுமார் 17.5 சதவீதம் பேர் கருவுறாமை பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் கருத்து; இது மக்கள் மத்தியில் பயத்தையும், கவலையையும் ஏற்படுத்தும் விஷயமாகவே அமைந்திருக்கிறது. இப்படி பாதிக்கப்படும் மக்களில் பலர் இயற்கை முறை மற்றும் மருந்துகள் வாயிலாகக் கருத்தரிக்க முயற்சித்து தோல்வியை எதிர்கொள்கின்றனர். அவர்களுக்கு IVF பெரும் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். மேலும், வயதான பெண்கள் மற்றும் மலட்டுத்தன்மை உடைய ஆண்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தம்பதிகளின் கர்ப்பத்தையும், குழந்தை பிறப்பையும் IVF உறுதி செய்வதாக ஆய்வாளர்கள் ஆணித்தரமாகத் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கருத்தரித்தல் மையங்கள்; இந்தியா அளவில் அனைத்து பெருநகரங்களிலும் IVF செயற்கை கருத்தரித்தல் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வளர்ச்சியே கருத்தரித்தல் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்துள்ளது என்பதற்கான ஆதாரம். ஆனால் இந்த சிகிச்சை குறித்து மக்கள் மத்தியில் தவறான எண்ணங்களும், கருத்து வேறுபாடுகளும் நிலவி வருகிறது. இந்த சிக்கலைத் தீர்க்கும் விதமாகவும், IVF மூலம் பிறந்த குழந்தைகளின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும் கூட இந்த நாள் மேலும் சிறப்பை பெறுகிறது.

கருவுறாமை அல்லது கருத்தரிக்க இயலாமை காரணம்; உலக அளவில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடல் ரீதியாகப் பல பிரச்சனைகள் உள்ளன. மேலும் சுமார் 35 வயதுக்கு மேற்பட்ட பெண்ணால் சாதாரண உடலுறவு மூலம் இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் பெரும் சிக்கல் உள்ளது. அதேபோல், சில ஆண்களால் கரு உருவாவதற்கு வலுவான விந்தணுக்களை உற்பத்தி செய்ய முடியாத நிலையும் இருந்து வருகிறது. இதைக் கருவுறாமை அல்லது கருத்தரிக்க இயலாமை என்று கூறுகிறோம்.

(IVF)டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை முறை; இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு உதவி இனப்பெருக்க தொழில்நுட்பம் அல்லது டெஸ்ட் டியூப் பேபி என்று அழைக்கப்படும் IVF மூலம் கருத்தரிக்க வைக்கப்படுகிறது. அதாவது, பெண்ணின் கருப்பையில் இருந்து முதிர்ந்த கருமுட்டைகளைச் சேகரித்து, ஆய்வகத்தில் வைத்து ஆணின் விந்தணுவுடன் சேர்த்துக் கருத்தரிக்க வைக்கப்படுகிறது. மூன்று வாரங்கள் கழித்துக் கருத்தரித்த அந்த முட்டைகளைப் பெண்ணின் கருப்பைக்கு மாற்றம் செய்து குழந்தை பிறப்பு வரை தொடர்ச்சியான சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

செயற்கை கருத்தரித்தலுக்கு முன்பான பரிசோதனை; செயற்கை கருத்தரித்தல் (IVF) மேற்கொள்வதற்கு முன்பு, பெண்களுக்கு, கருமுட்டை வெளியேற்றம், கருமுட்டைக் குழாய்களின் பரிசோதனை, கருப்பை குழி மதிப்பீடு மற்றும் அடிப்படை ஹார்மோன் உள்ளிட்ட பல பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், ஆண்களுக்கு, விந்து பகுப்பாய்வு உள்ளிட்ட சில சோதனைகள் நடத்தப்படும்.

100 சதவீதம் வெற்றியை தருமா இந்த IVF?; இந்த செயற்கை கருத்தரித்தல் முறை உலக நாடுகள் மட்டுமின்றி இந்தியாவிலும் நல்ல முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், இதை முழு மனதோடு ஏற்றுக்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ஆனால் இந்த செயற்கை கருத்தரித்தல் முறை 100 சதவீதம் வெற்றி பெறும் என உறுதி செய்ய முடியாது எனக்கூறும் மருத்துவர்கள் தோல்வியும் இருக்கலாம் என்பதை உணர்ந்து தம்பதிகள் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் ஒருமுறை தோல்வி அடைந்தால் மீண்டும் முயற்சித்து பார்ப்பதில் தவறு இல்லை எனவும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'இருதய பிரச்னை உள்ளவர்களுக்கு தூக்கமின்மை': காரணம் என்ன?

Last Updated : Jul 25, 2023, 2:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.