சென்னை: மனிதர்கள் மட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் அவசியமான தேவையாக செக்ஸ் உணர்வு உள்ளது. இந்த உணர்வு இயற்கையாகவே, எல்லா உயிரினங்களுக்கும் தோன்றும். இந்த உணர்வு தோன்றும் போது, செக்ஸ் ஹார்மோன்கள் சுரக்கும். இதற்கு காதல் ஹார்மோன்கள் என்றும் பெயர். இப்படி சுரக்கும் ஹார்மோன்களால், நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படி என்னென்ன நன்மைகள் உள்ளது என்று பார்க்கலாம்.
காதல் ஹார்மோன்கள்: உடலுறவுக்குப் பிறகு, நிம்மதியான உணர்வு தோன்றுவதற்கு முக்கிய காரணம் காதல் ஹார்மோன்கள் சுரப்பது தான். எப்பொழுதெல்லாம் மனதில் செக்ஸ் உணர்வு தோன்றுகிறதோ, அப்போதெல்லாம் இந்த காதல் ஹார்மோன்கள் சுரக்கும். டோபமைன், செரோடோனின், எண்டோர்பின், ஆக்ஸிடாசின், கார்ட்டிசோல் போன்றவை மகிழ்ச்சியான ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. நமது மூளையில் இருந்து சுரக்கக்கூடிய டோபமைன் ஹார்மோன், மனதிற்கு உற்சாகம் அளித்து, மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
நமது அன்றாட வாழ்க்கையில் பல்வேறு வேலை பளுவை ஏற்கிறோம். இதனால் மன அழுத்தங்களும், மனச்சோர்வும் ஏற்படுகிறது. செரோடோனின் ஹார்மோன், இதை சரி செய்ய உதவுகிறது. மனிதனின் மைய நரம்புத் தொகுதியில் சுரக்கக்கூடிய செரோடோனின் ஹார்மோன், மன அழுத்தத்தையும், மனச்சோர்வையும் நீக்கி, நிம்மதி அளிக்கிறது. ஆக்ஸிடாசின் ஹார்மோன், காதல் வயப்பட்டவர்களுக்கு சற்று அதிகரித்தே சுரக்கும். அதனால் தான், புதிதாக காதல் வயப்பட்டவர்கள் புத்துணர்வுடன் இருப்பார்கள்.
காதல் ஹார்மோன்களின் நன்மைகள்: இந்த காதல் ஹார்மோன், செக்ஸ் உணர்வைத் தூண்டி, உடலுறவிற்கான விருப்பத்தை அதிகரிக்கிறது. உடலுறவிற்குப் பிறகு உடலில் இருந்து எண்டோர்பின்கள் வெளியிடப்படும். இவை மனதை உற்சாகமாக்குகின்றன. மேலும், மனநிலையை பிரகாசமாக்குகின்றன. இதனால் தான் உடலுறவிற்குப் பிறகு நல்ல தூக்கம் வருகிறது. எண்டோர்பின் ஹார்மோன்கள், உடல் வலிகளையும், துன்பங்களையும் மறக்க செய்கின்றன. அதிகமான வேலையினால் ஏற்படும் தசை வலிகளையும் போக்கும்.
உடலுறவால் ஏற்படும் நன்மைகள்: செக்ஸ் மனநிலையை முற்றிலுமாக மாற்றி, மகிழ்ச்சியடைய வைக்கிறது. உடலுறவு கொள்வதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன. இது மனநிம்மதி, தூக்கம், மகிழ்ச்சியை அளித்து, தசை வலிகளிலிருந்தும், மன அழுத்தங்களில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. உடலுறவு உடலையும், மனதையும் பிணைக்கிறது. அதனால் தான் ஒவ்வொரு உயிரினத்திற்கும் செக்ஸ் நல்ல மருந்தாக அமைகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: Jaggery Health Benefits in tamil: மாதவிடாய் பிரச்சினையா? செரிமான பிரச்சினையா? வெல்லம் தான் சிறந்த தீர்வு!