ETV Bharat / sukhibhava

Low BP என்றால் என்ன? அறிகுறி மற்றும் சிகிச்சை.! - Low BP உணவு முறை

குறை இரத்த அழுத்தத்தால் பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், குறை இரத்த அழுத்தம் என்றால் என்ன? அது எதனால் வருகிறது? அதற்கு சிகிச்சை என்ன? என்பன உள்ளிட்ட மருத்துவர் வழங்கிய தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 1:37 PM IST

சென்னை: "இரத்த அழுத்தம்" என்பது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் ஒரு நிகழ்வு. ஆனால் அந்த இரத்த அழுத்தம் 120/80 மில்லி மீட்டர் ஆஃப் மெர்குரி என்ற அளவிலோ அதை விட 10 எண் அளவு முன் பின் இருந்தாலோ பிரச்சனை இல்லை. ஆனால் அதையும் தாண்டி இரத்த அழுத்தத்தில் ஏற்படும் சிக்கல்கள்தான் உயர் இரத்த அழுத்தம் அல்லது குறை இரத்த அழுத்தம் எனக்கூறப்படுகிறது.

இரத்த அழுத்தம் என்றால் என்ன? இதயத்தில் உள்ள இரத்த நாளத்தின் உள்ளப்பக்கத்தில் கொடுக்கக்கூடிய அழுத்தத்தைத்தான் இரத்த அழுத்தம் எனக்கூறுகிறோம். இரத்தத்தை ஹார்ட் பம்ப் செய்யும் சிஸ்டோல் எனும் ப்ரஷர்-தான் அந்த 120 என்பது, அதை விடுவித்து மீண்டும் அழுத்தம் கொடுக்க எடுக்கும் நேரத்தின் செயல் என்பது 80, இதை டைஸ்டாலிக் பிரஷர் எனக் கூறப்படுகிறது. இதைத் தான் நாம் 120/80 எனக் கணக்கிடுகிறோம்.

குறை இரத்த அழுத்தம் என்றால் என்ன? 120/80 என்ற இரத்தத்தின் இந்த அழுத்தம் சரியாக இருந்தால் மட்டுமே உடலின் மற்ற அனைத்து உருப்புகளும் சரியாக வேலை செய்ய முடியும். இந்த 120/80 என்பதில் 10 அளவு கொஞ்சம் கூடாதலாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். ஆனால் அதையும் தாண்டி அழுத்தம் கூடும்போதுதான் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதேபோல இரத்த அழுத்தம் குறையும்போது, குறை இரத்த அழுத்தம் சில நேரங்களில் சிலருக்கு ஏற்படலாம். அதாவது 90/60 வரை வரலாம் அதற்கும் குறைவாகச் சென்றால் அதைக் குறை இரத்த அழுத்தம் என்று கருதப்படும். ஆனால் பெண்களில் சிலருக்கு, இயல்பாகவே 90/60 என்ற அளவில் இரத்த அழுத்தம் இருக்கும். இதை நாம் குறை இரத்த அழுத்தம் என ஏற்றுக்கொள்ள முடியாது. அவர்களின் உடல் ஏற்றுக்கொண்ட அளவு அது. இதை வைத்து தனக்குக் குறை இரத்த அழுத்தம் உள்ளது என நினைத்துச் சிகிச்சைபெறக்கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறை இரத்த அழுத்தம் ஏற்பட என்ன காரணம்? உடலில் தண்ணீர் குறையும்போது இரத்த அழுத்தம் ஏற்படலாம். இதயம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக வரலாம், இணை நோய் உள்ளவர்களுக்கு வரலாம். சிரோசிஸ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரலாம்.

குறை இரத்த அழுத்தம் அறிகுறிகள்: உடல் ஆற்றல் இழந்து மயக்கம் வருவதுபோல தோன்றும். தலைச் சுற்றல் இருக்காது.. ஆனால் படுத்துக்கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றலாம். சிலருக்கு இதயத்துடிப்பு அதிகரிக்கலாம். இந்த இதயத்துடிப்பை நினைத்துப் பயப்படத் தேவை இல்லை. இதயம் இரத்தத்தின் அழுத்தத்தைச் சரி செய்துகொள்ளத் தன்னிச்சையாக மேற்கொள்ளும் முதல் உதவி செயல் அது.

குறை இரத்த அழுத்தத்திற்குப் பரிசோதனை: எப்பொழுதாவது குறை இரத்த அழுத்தம் ஏற்பட்டால் அதை நினைத்துப் பயப்படத் தேவை இல்லை. மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று தண்ணீர், உப்பு போன்றவற்றை அதிகம் உட்கொண்டால்போதும். ஆனால், தொடர்ந்து குறை இரத்த அழுத்தம் இருந்தால் உடல் பரிசோதனை செய்துகொள்வது முக்கியம். உடலில் வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தால் இதுபோன்று குறை இரத்த அழுத்தம் ஏற்படலாம்.

குறை இரத்த அழுத்தத்திற்குச் சிகிச்சை: குறை இரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறதோ அதைச் சரி செய்யவே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும்,. அது சரியானாலே குறை இரத்த அழுத்தம் என்பது சரியாகி விடும்.

ஒருவருக்கும் குறை இரத்தம் அழுத்தம் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டால் முதல் உதவியாக என்ன செய்ய வேண்டும்: அவரை கீழே படுக்க வைத்து கால்களைக் கொஞ்சம் சரிவாகத் தூக்கிப் பிடித்தவாறு வைக்க வேண்டும். அப்படி வைக்கும்போது கால்களில் உள்ள இரத்தம் இதயத்திற்குச் சென்று கொஞ்சம் நிவாரணம் கிடைக்கும். ஆனால் அதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

இதையும் படிங்க: தினமும் ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி.. டிமென்ஷியாவைக் கட்டுப்படுத்துமா?... ஆய்வு என்ன கூறுகிறது?..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.