ETV Bharat / sukhibhava

கரோனாவிலிருந்து எது நம்மை பாதுகாக்கும் - சோப்புகளா? கிருமிநாசினிகளா? - Hand washing

கோவிட் -19 தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள சோப்புகள் சிறந்தவையா அல்லது சானிடைசர்கள் சிறந்தவையா என்பது குறித்து தோல் மருத்துவர் டாக்டர். சைலாஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டி...

Sanitize
Sanitize
author img

By

Published : Jun 24, 2020, 3:29 PM IST

Updated : Jun 24, 2020, 3:39 PM IST

கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த அவ்வப்போது சோப்புகளை கொண்டு கை கழுவ வேண்டும் அல்லது சானிடைசர் எனப்படும் கிருமிநாசினிகளை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இதில், சானிடைசரை பயன்படுத்தவே பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர். ஏனென்றால், சானிடைசர்களை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம், தண்ணீர் தேவைப்படாது. இருப்பினும், சானிடைசர்களால் கைகளிலிருக்கும் வைரஸ்களை முழுமையாக அழிக்க முடியாது என்ற கருத்தும் பரவிவருகிறது.

இது குறித்து தோல் மருத்துவர் டாக்டர். சைலாஜா ஈடிவி பாரத்திற்கு அளித்த பேட்டி...

கைகளை சோப்புகளைக் கொண்டு கழுவுவதற்கும், சானிடைசர்களை பயன்படுத்துவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?

உங்கள் கைகளை சோப்புகளைக் கொண்டு கழுவுவது என்பது பாரம்பரிய வழி. இது சானிடைசர்களை பயன்படுத்துவதைவிட சிறப்பானது. சோப்புகளைப் பயன்படுத்தி கைகளை கழுவும்போது அது கைகளிலிருக்கும் அழுக்கு, கிருமிகள் மற்றும் எண்ணெய் பிசுக்குகளை நீக்குகிறது. சில வகையான கிருமிகளை அகற்ற சானிடைசர்களைவிட சோப்புகள் பயனுள்ளதாக இருக்கும். மேலும், சோப்புகளைக் கொண்டு கை கழுவினால், அது நீண்ட நேரத்திற்கு நீடிக்கும்.

சானிடைசர்கள் இரண்டு வகைப்படும்:

ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்கள் மற்றும் ஆல்கஹால் அல்லாத சானிடைசர்கள். இதுகுறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை விரைவாக உபயோகிக்கும்போது, அவை கைகளில் இருக்கும் சில வகையான வைரஸ்களை நீக்காது. உங்கள் விரல்கள் இன்னும் ஈரமாக இருப்பதால், இப்படி நடக்கிறது.

அதிகப்படியாக சானிடைசர்களை பயன்படுத்தினால், அது எந்தமாதிரியான விளைவுகளை உண்டாக்கும்?

அதிகப்படியாக சானிடைசர்களை பயன்படுத்தும்போது பொதுவாக தோலில் எரிச்சல், வறட்சி, அரிப்பு, இரத்தப்போக்கு உள்ளிட்டவை ஏற்படும்.

கர்ப்பிணிகள், குழந்தைகள் நீண்ட காலம் இந்த சானிடைசர்களை பயன்படுத்தினால், அது எந்தமாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.

மேலும், பாக்டீரியாக்களை கொல்லும் சானிடைசர்களையும் சோப்புகளையும், பயன்படுத்துவது என்பது, பாக்டீரியாக்களில் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கிவிடும் என்ற கவலையும் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்படுத்தி உள்ளது.

எல்லா நேரத்திலும், ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களை பயன்படுத்துவது சருமத்தில் சுருக்கங்களை ஏற்படுத்தும்.

குழந்தைகள் சானிடைசர்களை பயன்படுத்துவது குறித்து உங்கள் கருத்து?

குழந்தைகள் ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் பயன்படுத்துவது ஆபத்தானது. இதை அவர்கள் குடித்துவிட்டால் பெரும் ஆபத்து ஏற்படும். இதை முறையான மேற்பார்வையில் பயன்படுத்தினால் மட்டுமே பாதுகாப்பானதாக இருக்கும். மேலும், சமையலறையில் இதை பயன்படுத்தும்போது தீ விபத்துக்கள் ஏற்படும் அபாயங்கள் உள்ளன.

சானிடைசர்கள் கிடைக்காத சூழ்நிலையில் ஒருவர் என்ன செய்யலாம்?

கையுறைகளை அணிந்துகொள்ளலாம். முறையாக சோப்புபோட்டு கழுவியபின் அதை மீண்டும் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால், அதை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும்.

நோய்த்தொற்று பரவாமல் தடுக்க சோப்புகளைக் கொண்டு கைகளை முறையாக கழுவ வேண்டும் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுறுத்துகிறது. குறைந்தது 20 நொடிகள் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். சோப்புகள் கிடைக்காதபட்சத்தில் 60 விழுக்காடு ஆல்கஹால் கொண்டிருக்கும் சானிடைசர்களை பயன்படுத்தலாம் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவுரை வழங்கியுள்ளது.

தரைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் சானிடைசர்களை, மனிதர்கள் பயன்படுத்தலாமா?

கூடாது. அப்படி பயன்படுத்தினால், அது தோல் மற்றும் கண் எரிச்சலை உண்டாக்கும். அவை மனிதர்கள் மீது பயன்படுத்தவதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டதில்லை.

இதையும் படிங்க: 'கிருமி நாசினிகள்' - நன்மைகளும் தீமைகளும் குறித்த சிறப்புச் செய்தி

Last Updated : Jun 24, 2020, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.