ETV Bharat / sukhibhava

Turmeric Health Benefits in tamil:அஜீரண பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இனி வீட்டிலிருந்தே சரி செய்யலாம்! - Turmeric

Home remedies for Indigestion in Tamil: அஜீரண பிரச்சனை உள்ளவர்களா? உங்களுக்கான சிறந்த தேர்வு மஞ்சள் மட்டும் தான். இதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்றும், இதைப் பயன்படுத்துவதால் என்ன பலன் என்றும் பார்க்கலாம்.

அஜீரண பிரச்சனையா? கவலை வேண்டாம்.. இனி வீட்டிலிருந்தே சரி செய்யலாம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 4:52 PM IST

சென்னை: மஞ்சள், இஞ்சி குடும்பத்தைச் சார்ந்த ஒரு வகை மூலிகைப் பொருளாகும். இவை பாட்டி வைத்தியம் முதல் நவீன கால வைத்தியம் வரை சிறந்த அழகுசாதனப் பொருளாகவும், கிருமிநாசினியாகவும், அழற்சி எதிர்ப்பு பொருளாகவும் பயன்படுகிறது.

மஞ்சளில் குர்குமின் என்ற மூலப்பொருள் உள்ளது. இந்த மூலப்பொருள் தான் மஞ்சளுக்கு அதன் தனித்துவமான மஞ்சள் நிறத்தை அளிக்கின்றன. இவை வயிற்றில் உள்ள அமிலத்தை குறைக்கப் பயன்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற மூலப்பொருள் அஜீரண அறிகுறிகளைக் குறைப்பதில் மிகவும் பயன்படுகிறது என் சமீபத்திய ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

மஞ்சளில் உள்ள குர்குமின், அஜீரண அறிகுறிகள் மற்றும் வயிற்றில் அமிலத்தை குறைக்க பயன்படும் ஒமேபிரசோல் மருந்து போன்று செயல்படுகிறது. எனவே, அஜீரண பிரச்சனைக்கு மஞ்சள் எடுத்து கொள்வது சிறந்த தீர்வாக இருக்கும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மஞ்சளின் நன்மைகள்: நெஞ்செரிச்சல், வீக்கம், வயிற்றுப் புண்களுக்கான மாற்று சிகிச்சையாகவும் பயன்படுகிறது. குறிப்பாக சிறுநீர்ப்பை புண், இரைப்பை புண், கீல்வாதம், உணவுக் குழாய் மற்றும் இரைப்பையில் அதிகப்படியான அமிலம் சுரப்பது போன்றவற்றிற்கு பயன்படுகிறது. உடலில் காயம் ஏற்பட்டால் முதன்மை மருந்தாக மஞ்சள் பயன்படுகிறது.

மஞ்சளை எடுத்துக்கொள்ளும் முறை: மஞ்சளை சருமத்தில் அதாவது தோலில் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தலாம். உணவு அல்லது பானத்தில் மசாலாப் பொருளாகச் சேர்த்தும் சாப்பிடலாம். மஞ்சள் ஒரு அழகு சாதனப் பொருளாகும். இது சருமத்திற்கு தங்கப் பொலிவை அளிக்கிறது. அவற்றை பானத்தில் இரவு நேரத்தில் கலந்து குடிப்பதன் மூலம் தூக்கம் நன்றாக வருவதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.

மஞ்சளை உணவில் எடுத்துக்கொள்ளும் முறை: மஞ்சளை இறைச்சி, காய்கறிகள், தோசை, சூப், பால் போன்றவற்றில் அதன் தூளைப் பயன்படுத்துவதன் மூலம் மஞ்சளை நம் அன்றாட உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம். தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, மஞ்சளை உட்கொண்டால் வீக்கம் மற்றும் அல்சர் போன்ற பிரச்சனைகள் இருக்காது.

யார் மஞ்சளை அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது: கர்ப்பிணி பெண்கள் அதிக அளவு மஞ்சள் பயன்படுத்துவது பாதுகாப்பற்றதாகும். இது மாதவிடாய் காலத்தை ஏற்படுத்தலாம். மஞ்சள் டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைக்கும் மற்றும் விந்தணு இயக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டதால் குழந்தை பெற முயற்சிப்பவர்கள் மஞ்சளை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும்.

மஞ்சளில் உள்ள ஆக்சலேட்டின் அளவு, நம் உடலில் சிறுநீர கற்களை உண்டாக்குகிறது. எனவே, சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள், பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மஞ்சள் அதிகளவு பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மஞ்சளில் உள்ள குர்குமின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால், ஏற்கனவே நீரழிவு நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மஞ்சளை அதிக அளவு எடுத்துக்கொள்ள கூடாது.

மஞ்சள் உணவில் எடுத்துக்கொள்ளும் அளவு: சுகாதார ஆய்வறிக்கையின் படி, ஒரு நபர் நாளொன்றுக்கு சுமார் 500 மல்லி கிராம் முதல் 1-3 கிராம் வரை மட்டும் தான் மஞ்சளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ எடைக்கு 0.3 மி.லி. கிராம் அளவுக்கு மட்டுமே எடுக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

மஞ்சளின் தீமைகள்: அதிக அளவு மஞ்சளை எடுத்துகொள்ளும் பொழுது தான் வயிற்று வலி, வயிற்றுக் கோளாறு, தலைவலி, தலை சுற்றல் போன்ற பல உடல் நலப்பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.

இதையும் படிங்க: Jaggery Health Benefits in tamil: மாதவிடாய் பிரச்சினையா? செரிமான பிரச்சினையா? வெல்லம் தான் சிறந்த தீர்வு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.