சென்னை: இந்த நவீன உலகிலும் முடியை விரும்பாத பெண்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நீளமான முடியை விரும்பாவிட்டாலும், அடர்த்தியான மிருதுவான முடிக்காக அதிக மெனக்கெடுத்து தோல்வியைத் தழுவுவர். ஒவ்வொரு பருவநிலைகளுக்கு ஏற்ப நம் உணவுபழக்கம், சரும பராமரிப்பு போன்றவற்றில் சில மாற்றங்களை கொண்டு வருவது போல, பருவநிலைக்கு ஏற்ப கூந்தலை பராமரிப்பது முக்கியம். மற்ற பருவகாலங்களை விட குளிர்காலத்தில் முடி அதிக பிரச்சினைகளை சந்திக்கும். சில நடவடிக்கைகள் மூலம் முன்னெடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைகளை தடுத்து, கூந்தலை பளபளப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
குளிர்காலத்தில் ஏற்படும் முடி பிரச்சினைகள்: குளிர்ந்த வெப்பநிலையால் முடி தன் ஈரப்பதத்தை இழக்கும். இதனால் முடி வறண்டு காணப்படும். மேலும் தலைமுடி உதிர்வு, உடைப்பு, பிளவு போன்றவை இருக்கும். உச்சந்தலையில் சுரக்கும் இயற்கை எண்ணெய் சுரப்பு குறைந்து பொடுகுத்தொல்லை ஏற்படும். இவற்றில் இருந்து முடியை எவ்வாறு பாதுகாப்பது என்று பார்க்கலாம்.
அடிக்கடி ஹேர் வாஷ்: குளிர்காலத்தில் அடிக்கடி தலைக்கு குளிக்கக் கூடாது. ஏனெனில் உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் குறைந்துவிடும். இதனால் முடி மேலும் வறண்டு விடும்.
வெந்நீர் முடியை அலசக் கூடாது: குளிர்காலத்தில் பலர் வெந்நீரில் தலைக்கு குளிப்பர். உச்சந்தலையில் உள்ள இயற்கையான எண்ணெய் அகற்றப்பட்டு முடி, வறட்சியை சந்திக்கும்.
அதிக கெமிக்கல் உள்ள ஷாம்பு: அதிக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை பயன்படுத்துவதால் முடி அதன் ஊட்டச்சத்துக்களையும் இழந்து, முடி மெலிவடைதல், முடி உடைதல் போன்ற பிரச்சினைகள் எழும்.
ஹேர் ஸ்ட்ரைட்னர் வேண்டாம்: ஹேர் ஸ்ட்ரைட்னர் (Hair Straightener), ஹேர் டிரையர் (hair Dryer) போன்றவற்றின் அதிகப்படியான பயன்பாடு முடியை வறட்சியாக்கும். ஆகவே அவற்றை குறைத்து கொள்வது நல்லது.
ஹேர் கண்டிஸ்னர்கள் பயன்படுத்தலாம்: குளிர்காலத்தில் கூந்தல் விரைவாக வறண்டு விடும் என்பதால் முடியை ஈரப்பதமாக வைத்திருப்பது அவசியம். மிதமான அளவு கெமிக்கல் உள்ள ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். ஷாம்பு பயன்படுத்திய பின்னர், கண்டிஸ்னர் பயன்படுத்த வேண்டும்.
கூந்தல் பராமரிப்பிற்கு எண்ணெய்: குளிர்காலத்தில் தலைக்கு குளிக்கும் போது, தேங்காய் எண்ணெய், ஜோஜோபா எண்ணெய், பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் போன்ற எண்ணெய்கள் தேய்த்து, 45 நிமிடங்கள் கழித்து குளித்தால் முடி ஈரப்பதத்தோடு இருக்கும்.
ஹேர் மாஸ்க்: குளிர்காலத்தில் ஹேர் மாஸ்க்குகளை பயன்படுத்தலாம். சந்தைகளில் கிடைக்கும் ஹேர் மாஸ்க்குகளையும் பயன்படுத்தலாம், அல்லது இயற்கையான வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். அரிசி மாவு, பால், தேன் மூன்றையும் எடுத்து பேஸ்ட் போல் கலந்து, தலையில் தடவி 20 நிமிடங்களுக்குப் பிறகு கழுவலாம். இந்த ஹேர் மாஸ்க் மூலம் பளப்பளப்பான கூந்தலை பெற முடியும்.
மைக்ரோஃபைபர் துண்டு: குளித்தப்பிறகு முடியை உலர்த்த பருத்தி துண்டிற்கு பதிலாக மைக்ரோஃபைபர் துண்டுகளை பயன்படுத்தலாம். இவை முடியை மென்மையாக்கும்.
முடி ஆரோக்கியத்திற்கு உணவு: முடியை பராமரிப்பதற்கு பல டிப்ஸ்களை பின்பற்றினாலும், முடி ஆரோக்கியத்திற்கு ஏற்ப உணவை எடுத்து கொள்வதும் அவசியம். முடியின் ஆரோக்கியத்திற்கு உதவும் போலிக் அமிலம், விட்டமின் பி12 மற்றும் விட்டமின் டி நிறைந்த உணவுகளை உணவில் எடுத்து கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் மிளகு தூள், பெர்ரி, நட்ஸ் போன்றவற்றை உணவில் எடுத்து கொள்வது அவசியம்.
இதையும் படிங்க: குளிருக்கு இதமாக வெந்நீரில் குளிக்க ஆசையா..? வாட்டர் ஹீட்டர்கள் பயன்படுத்தும் முன் இதை கவனிங்க..!