ETV Bharat / sukhibhava

BMI பரிசோதனை ஆரோக்கியத்தை உறுதி செய்யுமா - மருத்துவர்கள் கூறுவது என்ன? - மருத்துவர்கள்

BMI index: உயரத்திற்கேற்ற எடை என்ற விகிதத்தைக் குறிக்கும் பிஎம்ஐ (BMI) அளவீடு, ஆரோக்கியத்தை அளவிடுமா? என்ற கேள்வி இருக்கலாம். அதற்கு மருத்துவர்கள் கூறும் ஆய்வுப்பூர்வமான தகவல் மற்றும் அதற்கான மாற்று என்ன? உள்ளிட்ட பலவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 11, 2023, 7:40 PM IST

சென்னை: உயரத்திற்கேற்ற எடையைக் கணக்கிடும் அளவீட்டை பிஎம்ஐ (BMI- Body Mass Index) எனக் கூறப்படுகிறது. இது உடல் எடை மற்றும் மனிதர்களின் உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து துல்லியமாக அளவிடும் எனப் பலரும் நினைத்துள்ளனர். ஆனால் இந்த BMI-யை மருத்துவர்கள் மற்றும் மருத்து ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட பலரும் உடல் எடையைக் கணக்கிட ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.

BMI என்றால் என்ன? BMI என்பது மனிதர்களில் நான்கு வேறுபட்ட எடைப்பிரிவை வரிசைப் படுத்தி ஆய்வு அல்லது பரிசோதனை மேற்கொள்ளும் ஒரு முறையாகும். இதில் உடல் நிறை குறியீடு எண் BMI 18.5-க்கும் குறைவாக இருந்தால் அது குறைந்த எடைப் பிரிவு எனவும், BMI 18.5 முதல் 24.9-க்கும் இடைப்பட்டு இருந்தால் அது சாதாரண எடைப் பிரிவு எனவும், BMI 25.0 முதல் 29.9-க்கும் இடைப்பட்டு இருந்தால் அதை மிகை எடை எனவும் BMI 30-க்கும் அதிகமாக இருந்தால் அதை அதீத மிகை எடை எனவும் அளவிடப்படுகிறது. இது ஒருவரின் உயரத்துடனான எடையை ஒப்பிட்டுக் கணக்கிடும் ஒரு ஆய்வு முறையாகும்.

BMI-யை கண்டு பிடித்தவர் யார் தெரியுமா? பெல்ஜியத்தை சேர்ந்த கணிதவியலாளர் Lambert Adolphe Jacques Quetelet என்பவர் கடந்த 1832ஆம் ஆண்டு இந்த BMI-யை கண்டுபிடித்துள்ளார். ஆரம்பக்கட்டத்தில் மேற்கு ஐரோப்பிய மனிதர்களின் உடல் எடை உள்ளிட்டவற்றை மட்டும் கணிக்கப் பயன்படுத்தப்பட்ட நிலையில் இது மருத்துவ உலகில் அங்கீகரிக்கப்பட்டு Quetelex என்ற முறை BMI- என மாற்றம் பெற்றுக் கடந்த 1972ஆம் ஆண்டு உலக அளவில் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

BMI எதற்காகப் பயன்படுகிறது? BMI ஒரு கணித சூத்திரமாக உள்ள நிலையில் மனிதனின் எடையை உள்ளடக்கிய ஆய்வை மட்டுமே இதனை வைத்து மேற்கொள்ள முடியும். மருத்துவ ரீதியாக இது உடல் ஆரோக்கியம் மற்றும் கொழுப்பின் அளவீடு குறித்து BMI-யை வைத்து எவ்வித தகவலைப் பெற முடியாது.

நீரிழிவு, வளர்சிதை மாற்றக் கோளாறு, இதய நோய் உள்ளிட்ட சில பிரச்சனைகள் தொடர்பான உடல் உபாதைகளை BMI மூலம் முன்கூட்டியே கணிக்க முடியும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இதன் மூலம் பாலினம், வயது உள்ளிட்டவைகள் குறித்துக் கணிக்க முடியாது எனவும் ஐரோப்பிய ஆண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த BMI, மாதவிடாய் நின்ற பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட பலருக்குப் பொருந்தாது எனவும் கூறியுள்ளனர்.

மருத்துவத்துறையில் BMI மீது இருக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை நோயாளிகளின் ஆரோக்கியத்தைக் கேள்விக் குறியாக்கி விடும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

BMI-க்கு மாற்றாக எதைப் பயன்படுத்தலாம் ; ஒரு நபரின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதற்கான முதன்மை நோயறிதல் சோதனையாக BMI-யை மட்டும் பார்ப்பதை தவிர்த்து விட்டு அதனுடன் மற்ற உடல் நல ஆய்வு மற்றும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் நமது உடலின் முக்கிய உறுப்புகளைச் சுற்றியுள்ள தொப்பை மற்றும் கொழுப்புகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுதியான தீங்கை விளைவிக்கும் என அறிவுறுத்தும் ஆராய்ச்சியாளர்கள் உங்கள் இடுப்பு, இடுப்பின் சுற்றளவு மற்றும் உயரம் உள்ளிட்டவை குறித்த துல்லியமான அளவீட்டைக் கையாள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இடுப்பு சுற்றளவு அளவீடு; இது ஆண்களுக்கு 94cm-க்கு குறைவாகவும், பெண்களுக்கு 80cm க்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். விலா எலும்புகளின் அடிப்பகுதிக்கும் இடுப்பு எலும்புகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளைக் கொண்டு இந்த அளவீடு மேற்கொள்ளப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ஆரோக்கியமான தசைகள் உள்ளிட்டவை இந்த ஆய்வின் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

இடுப்பு மற்றும் அதற்கு இடையேயான விகிதம்; உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி இது பெண்களுக்கு 0.85 அல்லது அதற்கும் குறைவாகவும், ஆண்களுக்கு 0.9 அல்லது அதற்கும் குறைவாகவும் இருக்க வேண்டும். இது ஆரோக்கியமான உடலுக்கான அறிகுறி என்றே கூறலாம். இந்த ஆய்வின் மூலம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவு மற்றும் அது இடுப்பு பகுதியில் சேமிக்கப்படும் அளவு குறித்துத் தெரிந்துகொள்ளலாம். இந்த ஆய்வு, வயதானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இடுப்பு மற்றும் உயரத்திற்கு இடையேயான விகிதம்; இது ஒருவரின் உயரத்துடன் இடுப்பு சுற்றளவை வகிக்கும் முறையாகும். ஒரு நபரின் இடுப்பு சுற்றளவு என்பது அவரின் உயரத்தில் பாதியாக இருக்க வேண்டும். இது ஆரோக்கியம் தொடர்பான ஆய்வில் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. மேலும் தோல் மடிப்பு அளவீடு மூலம் உடல் அமைப்பு மற்றும் கொழுப்பின் சதவீதத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய BMI பரிசோதனை மட்டும் இன்றி அதனுடன் இதுபோன்ற பல ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, காய்கறிகள், தானியங்கள் உள்ளிட்ட குறைந்த கொழுப்பு விகிதத்தைக் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது உங்களைச் சுறுசுறுப்பாக வைப்பதுடன் இருதயத்தையும் ஆரோக்கியமாகப் பாதுகாக்கும்.

இதையும் படிங்க: குறட்டை பிரச்னைக்கு இதுவும் காரணமா? - மூக்கு எலும்பு வீக்கத்தால் வரும் தொல்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.