வாஷிங்டன்: தனிமையில் இருக்கும் ஆண்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
இந்த ஆய்வை ஈஸ்டர்ன் பின்லாந்து பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. 1980களில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. இதில் நடுத்தர வயதுடைய 2,570 பேர் பங்கெடுத்தனர். இவர்களின் அனைத்து விதமான நடவடிக்கைகளும், உடலியல் மாற்றங்களும் குறிப்பெடுக்கப்பட்டது.
அதில் தூக்கமின்மை, மன சோர்வு, இதய கோளாறு ஆகியவற்றையும் மருத்துவக் குழு கண்காணித்து வந்தது. இவர்களில் பெருபாலானோருக்கு புற்றுநோய் காரணிகள் உடற்கூறுகளில் தென்பட்டதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இதனைக் கொண்டு அறிக்கை தயாரித்த அவர்கள், தனிமையில் இருக்கும் ஆண்களுக்கு புற்றுநோய் வருவததற்கான அபாயம் அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.